Freelancer / 2026 மே 12 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. படுதோல்வி அடைந்த நிலையில் அந்தக்கட்சி இரண்டா உடைந்துள்ளது.
தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், எடப்பாடி தலைமை மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக நேற்று மதியம் எடப்பாடியை அ.தி.மு.க. சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க வெறும் 17 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவுக் கடிதம் வழங்கினர். ஏனைய 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தரவில்லை.
இந்தநிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக, சி.வி. சண்முகம் தலைமையில் இந்த 30 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளனர்.
சட்டமன்ற குழுத்தலைவர் வேலுமணி என்றும், கட்சிக் கொறடா சி.விஜயபாஸ்கர் எனவும் கடிதம் வழங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சண்முகம் தலைமையிலான தரப்பினர், த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர் எனவும் அவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தேர்தலில் அ.தி.மு.க. சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, கட்சி தற்போது மீண்டும் பிளவுபடும் நிலையை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. (a)

11 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
1 hours ago