Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
George / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் காரத்தே சாம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை எட்டுப்பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், அநுராதபுரம் பிரதான நீதவானும் மாவட்ட மேலதிக நீதவானுமாகிய உமேஸ் ஷானக்க முன்னிலையில் இன்று செய்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதன்போது, சந்தேகநபர்கள் 6 பேரை எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், ஏனைய இரண்டு சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .