Freelancer / 2024 ஏப்ரல் 02 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
மதுரங்குளி - முக்குதொடுவாவை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அத்தோடு, இந்த பிரதேசத்தில் வாழும் இருவரால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்த நிலையில், அப் பிரதேசத்தின் டின் மீன் தொழற்சாலை தொடர்பாக வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே தீ விபத்து இடம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago