2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இராணுவ தளபதி விளக்கம்

J.A. George   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கையிலுள்ள தூதரகங்களிலுள்ள ஒன்பது வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசனை பிரதிநிதிகளுக்கு இலங்கையில் தற்போதைய கொரோனா தொற்று நோய் தொடர்பான நிலைமைகள் குறித்து  விளக்கமளித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளின் பேரில் இராணுவ தலைமையகத்தில் இந்த சந்திப்பு குறித்து நேற்று பிற்பகல் (21) இடம்பெற்றது.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான், மாலைதீவு பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன், ஜக்கிய இராஜ்ஜியம், மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசனை பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு நன்றிகளை தெரிவித்த இராணுவ தளபதி அங்கு உரையாற்றுகையில்,கொவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆயுதப் படைகள் சிறப்பான பாத்திரங்களை வகிப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன், குறித்த தூதரக பிரதிநிதிகளுக்கு ஏதாவது தேவைகள் ஏற்படுமாயின் தன்னை தொடர்பு கொள்ளுமாறு இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X