2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இறுதிக் கட்டத்தில் புதிய தடுப்பூசி: மோடி தெரிவிப்பு

Freelancer   / 2021 செப்டெம்பர் 25 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் அவையில் தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12. வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் உள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வில் உரையாற்றிய போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

இந்த ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடியது. பன்முகத்தன்மைதான் எங்கள் வலுவான ஜனநாயகத்தின் அடையாளம்.

வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைவருக்குமானதாகவம் எல்லோரையும் அடையும் விதத்தில் இருக்க வேண்டும்.

தீவிரவாத அச்சுறுத்தல் உலகின் பல பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையை கொண்டு செல்ல வேண்டும்.

ஆப்கானிஸ்தான் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும்.

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எந்த நாடும் அங்குள்ள சூழ்நிலையை பயன்படுத்தி தங்கள் சுயநலன்களுக்கு ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு பரவலான, உலகளாவிய, அனைவரையும் வளர்க்கும் ஒரு வளர்ச்சி செயல்முறையை நாங்கள் நம்புகிறோம். இந்தியா வளரும் போது உலகம் வளரும். இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும்.

கொவிட் -19 க்கான உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது.

தீவிரவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள், மற்றவர்கள் மீது தாக்கும் அதே கருவியால் தாங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .