2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை மீனுக்கான தடை: 2016இல் நீங்கும்

Gavitha   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன்பிடி தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தகைமைகளை எட்டுவதற்கான முதற்படியாக இலங்கையரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பவுள்ளது.

இதனையடுத்து, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள், முன்னேற்றம் தொடர்பாக மதிப்பிட்டு சமர்பிக்கப்பட்ட அறிக்கையை தொடர்ந்ததான அறிக்கையை சமர்பிப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்தான மீன்பிடிப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தற்போது நடைமுறையில் இருக்கையில், அடுத்த வருடம் இந்தத் தடை நீக்கப்படும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கையில் இருப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் கிறேஸ் ஆசீர்வாதம் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மதிப்பீட்டை மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அறிக்கை சமர்பிப்பார்கள் என்றும் அதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியம், தடையை நீக்குவதற்கான தகைமைகளை இலங்கை அடைந்துள்ளதா என்று தீர்மானிக்கும் என்றும், எனினும் இந்த நடைமுறைக்கு காலம் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் மீன்பிடிப்பொருட்கள் மீதான தடை ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளபோதும், இலங்கை அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தகைமைகளை அடைய பத்து மாதங்களாக பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தகைமைகளில் கப்பலில் ராடர் கருவியைப் பொருத்துவது, மீன்பிடிப் படகுகளில் கப்பல் கண்காணிப்பு கருவிகளை பொருத்துவது, சட்டரீதியற்ற முறைகளில் மீன் பிடிக்கப்படும்போது அபராதங்களை அதிகரித்தல் போன்றவை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X