2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கையில் சீன படைமுகாமில்லை

Princiya Dixci   / 2017 ஜனவரி 05 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சீனாவின் படைமுகாம் ஒன்று நிறுவப்படவுள்ளதாக வெளிவந்த தகவலை மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மறுத்துள்ளார்.

“ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் படைமுகாமொன்று அமைக்கப்படவுள்ளதாக மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தினை சில விஷமிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி இதுபோன்றதொரு படைமுகாமினை எந்தவொரு நாட்டினாலும் நிறுவமுடியாது. எமது நாட்டின் கடற்படையினரே அனைத்து துறைமுகங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தி வருகின்றார்கள்.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகப் பகுதியில் புதிய சீமெந்துத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திரவ இயற்கை வாயுத் தளம் என்பன நிறுவப்படவுள்ளன. ஒப்பந்த அடிப்படையில், ஹம்பாந்தோட்டை துறைமுக நட்டத்தினை ஈடுசெய்வதற்கு சீனாவுடன் சேர்ந்து வேலைசெய்யவுள்ளோம். இதற்கான ஒப்பந்தம் வெகுவிரைவில் கைச்சாத்திடப்படும்.

அதேவேளை, ஹம்பாந்தோட்டைப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் முதலீட்டு வலயமொன்றினை உருவாக்குவது தொடர்பிலும் ஆராய்ந்து வருகிறோம்” என்று, அமரவீர மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .