2025 ஒக்டோபர் 11, சனிக்கிழமை

இலங்கை கல்வித் திட்டத்தில் மாற்றம் : பிரதமர் அதிரடி

Freelancer   / 2025 ஒக்டோபர் 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களுக்கு சட்டக் கல்வி தொடர்பான கல்வியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

தரம் 6 முதல் 8 வரையான பாடவிதானங்களில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி மறுசீரமைப்பின் போது சாதாரண தரத்திலும் இதனை தெரிவுப் பாடமாக இணைக்க எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, குடியுரிமை பாடத்தில், 6ஆம் தரத்துக்கான சட்டக்கல்வி, மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒழுக்கமான சமூகத்திற்காக சட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை கருத்திற்கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் குறிப்பிட்டுள்ளார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X