2025 ஒக்டோபர் 11, சனிக்கிழமை

தொட்டலங்க கண்ணாவுக்கு ஆயுள் தண்டனை

Freelancer   / 2025 ஒக்டோபர் 11 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

39 கிராம் ஹெரோயின் கடத்தியதற்காக "தொட்டலங்க கண்ணா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரைக் கைது செய்து உடனடியாக தண்டனையை நிறைவேற்றுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவு பிறப்பித்தது.

எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில், கணபதி கணேஷ் எனப்படும் தொட்டாலங்க கண்ணா மீது 2014 டிசம்பர் 26 ஆம் திகதி சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

விசாரணையின் போது பிணை வழங்கப்பட்ட பிரதிவாதி நீதிமன்றத்தை தவிர்த்து வந்த நிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.

பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

அதன்படி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X