Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்ச்சைக்குரிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தின் பிரகாரம், அமெரிக்காவின் நியூ போட்ரஸ் நிறுவனத்துக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படும் பட்சத்தில், இலங்கை மீது சர்வதேச தடைகளை விதிக்க அந்நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் எஹலியகொடவில் இன்று (14) இடம்பெற்ற மக்கள் சபைக் கூட்டத்தின் போதே அமைச்சர் வீரவன்ச இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேலும் விவாதிக்கப்படும் என்றார்.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தமது அவதானிப்புகள் மூலம் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அபாயம் ஏற்படும் என்று குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் நிதியமைச்சின் செயலாளர் கையொப்பமிட்டதன் பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.
குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக இந்தப் பிரச்சினையை பயன்படுத்தக் கூடாது என்றும் சாதகமான தீர்வொன்றைப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
36 minute ago
48 minute ago
55 minute ago