Freelancer / 2021 ஒக்டோபர் 09 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வேண்டுகோளை ஏற்று இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய இராணுவ தளபதியின் விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பங்கேற்புடன் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (13)
நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்தோடு இந்திய படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்று வருகின்ற “மித்ர சக்தி” இராணுவ கூட்டுப் பயிற்சிகளின் இறுதிகட்ட நிகழ்வுகளையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Mar 2026