2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு எதிராக இராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்

Editorial   / 2019 மார்ச் 12 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நால்வரையும், கைப்பற்றப்பட்ட இந்திய மீனவப் படகையும் மீள ஒப்படைக்கக் கோரி, தமிழ்நாடு – இராமேஸ்வர பகுதி மீனவர்கள் இன்று முதல் (12) காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ்நாடு மீனவ சங்கங்களின் கூட்டமொன்று, நேற்று (11) நடைபெற்ற போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த இந்திய மீனவப் படகுகள் அனைத்தும் மீள பயன்படுத்தமுடியாத அளவுக்கு காணப்படுகின்றமையால், அவற்றுக்கான நட்டஈடும் வழங்கப்படவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .