2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் இருந்து 9 மீனவர்கள் நாடு திரும்பினர்

Editorial   / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் சொந்த ஊர் திரும்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து வேல்முருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சுரேஷ், ஆறுமுகம், முத்துக்குமார், மணிகண்டன், ஜெயசீலன், வேலு, முத்து இருளாண்டி, முகம்மது பக்ருதீன், ரங்காசாமி ஆகியோர் கடந்த ஜூலை 25-ம் திகதி கடலுக்குச் சென்றனர். அன்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

9 பேர் மீது வழக்கு: அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, 9 மீனவர்களையும் கைது செய்தனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதவான் கஜநிதிபாலன், மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 9 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

  பறிமுதல் செய்யப்பட்ட 2 படகுகளின் உரிமையாளர்களும் செப்.14-ம் திகதி உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் விடுதலையான 9 மீனவர்களும் கட்டுநாயக்க சர்வதேச  விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை சனிக்கிழமை (19)  வந்தடைந்தனர். தொடர்ந்து 9 பேரையும் மீன்வளத் துறையினர் தனி வாகனம் மூலம் மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X