Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச துறைகளுக்கான வீடியோ மூலமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான எளிய முறைமையொன்று, இலங்கைத் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிநுட்பப் பிரதி நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
https://meet.gov.lk என்ற முகவரியூடாக மேற்கொள்ளப்படவுள்ள இந்தச் செவையை, டெலிகொம், மொபிடெல், டயலொக், ஹட்ச் ஆகிய சேவைகளினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸ் தொற்று பரவவுதைக் கட்டுப்படுத்தும் பிரதான வழியாக, வீட்டுக்குள்ளேயே அனைவரையும் இருக்குமாறும் அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களை, வீட்டிலிருந்தே பணியாற்றுமாறும் அறிவித்துள்ள அரசாங்கம், அவ்வாறு வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய, இலங்கைத் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிநுட்பப் பிரதி நிறுவனங்களால், அரசாங்கப் பிரிவுகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ள இந்த வீடியோ கருத்தரங்கு, ஒரே நேரத்தில் அதிகமானோர் நேரடியான கருத்தரங்குகளில் இணைந்திட வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல விசேட அம்சங்களை உள்ளடக்கிய அரசாங்கத் தகவல் உட்கட்டமைப்பு வசதிகள் கட்டமைப்பு (LGII) உதவியுடன், மிகவும் பாதுகாப்புடன் இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரம் உரிய (LGC) மென்பொருள் வசதிகளை கொண்டுள்ளது.
இதுவரை 120 பிரதான அரச நிறுவனங்கள் இதன்மூலம் பயனடைவதுடன், குறித்த நிறுவனங்கள் தமது அன்றாட கலந்துரையாடல்களை இதன்மூலம் நடத்துகின்றன. எனவே இதன் வசதிகள் மேலும் ஊக்குவிக்கப்பட்டுள்ளனவென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 Jul 2025
14 Jul 2025