Freelancer / 2025 மார்ச் 01 , மு.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைப் பகுதிகளில் வீதிகள் அமைக்கும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இந்த நிலையில், அவர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏனைய 41 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமோலி மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமமான மனா அருகே நேற்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைச் வீதிகள் அமைப்பு எனும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, அவர்களை மீட்கும் பணியில் இராணுவம் ஈடுபடத் தொடங்கியது. மீட்புப் பணி தொடர்பாக பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சமோலியில் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பணியாளர்கள் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.
மீதமுள்ளவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்புப் பணியில் ஐ.டி.பி.பி. மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். (a)

12 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago