Editorial / 2025 ஜூன் 03 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், குளியாப்பிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாக தன்னுயிரை திங்கட்கிழமை (02) மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் தொடர்பில், அந்த கல்லூரியில் கற்கும் நான்கு மாணவர்கள் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரிக்கு அருகில் உள்ள வாவியில் அந்த மாணவி குதித்துள்ளார். பிரதேசவாசிகள் சிலர் இணைந்து மாணவியை காப்பாற்றி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த மாணவி, கல்லூரியில் இடம்பெறும் பகிடிவதை காரணமாக தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று வாவியில் குதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
27 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago