Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஜூலை 27 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி இடம்பிடித்துள்ளார் என அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, உலகத் தலைவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்றும் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதோடு உலக நாடுகளில் எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்றும் ஆய்வு எடுக்கப்பட்டது.
இவை மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்கின்றனர் என்றும் முந்தைய நிகழ்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த ஆய்வு மற்றும் மதிப்பீடு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதில் முதல் 8 இடங்களை பிடித்து இருக்கும் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அவர் 100 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்களை பெற்று அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறார்.
2ஆவது இடத்தில் தென் கொரிய அதிபர் லி ஜோ மியுங்க் உள்ளார். அவருக்கு 59 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.
அர்ஜென்டினா நாட்டின் அதிபர் ஜாவிஸ் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த நம்பிக்கை பட்டியலில் 8ஆவது இடத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் (44 மதிப்பெண்கள்) தள்ளப்பட்டுள்ளார். இந்த மாதம் 4ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இந்த ஆய்வுகள் எடுக்கப்பட்டு புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 4ஆவது இடத்தை கனடா பிரதமர் மார்க் கார்னியும் (56 மதிப்பெண்கள்),
5ஆவது இடத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸும்(54 மதிப்பெண்கள்)
6ஆவது இடத்தை மெக்ஸிகோ அதிபர் கிளெடியா ஷெய்ன்பாமும் (53 மதிப்பெண்கள்),
7ஆவது இடத்தை சுவிட்சர்லாந்து அதிபர் கரின் கெல்லர் சுட்டரும் (48 மதிப்பெண்கள்) பிடித்துள்ளனர்.
இது குறித்து பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களால் நேசிக்கப்பட்டு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் மதிக்கப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வு முடிவில் அவர் மீண்டும் உலகின் நம்பிக்கையான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
உலகளவில் மிக உயர்ந்த மதிப்பீடு பெற்ற மற்றும் மிகவும் நம்பகமான தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவரது வலுவான தலைமையில் பாரதம் பாதுகாப்பான கைகளில் உள்ளது" என்று கூறியுள்ளார்.
இதேபோல, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்ட தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
56 minute ago