2025 மே 19, திங்கட்கிழமை

உள்ளக விசாரணையில் ஜப்பான் நீதிபதி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 20 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக் கட்ட மோதல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையின் போது இலங்கை, ஜப்பானிய நீதிபதியின் சேவைகளை பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் பங்கேற்ற ஜப்பானிய நீதிபதி மோட்டோ நொகுச்சியினுடைய  சேவைகளை பெற்றுக்கொள்வது சிறப்பாக இருக்கும் என ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, தனது அண்மைய ஜப்பானிய விஜயத்தின்போது தனக்கு கூறியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது ஜப்பானிய விஜயம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கையில் தெரிவித்தார்.

ஏற்கனவே நொகுச்சி இலங்கையில் பணியாற்றியதாகவும், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகளின் போது அவர் பங்குபற்றியதாகவும் அபே தெரிவித்ததாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்தவேளையில், கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நொகுச்சியின் ஆலோசனைகளைப் பெற்றதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

தவிர, உள்நாட்டில் உருவாக்கப்படும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு தனது முழுமையாக ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.  

இதேவேளை இலங்கையின் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை பாராட்டியதாகவும், பண்டாராநாயக்க சர்வதேச விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 45 பில்லியன் யென்னை வழங்கவிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X