2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உஷ்ணம் தொடரும்

Princiya Dixci   / 2016 மார்ச் 19 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு நேர் மேலே சூரியன் உள்ளதால் வெப்பமான காலநிலை ஏப்ரல் வரைத் தொடரும் எனவும் நாட்டில் வெப்பநிலை பகலில் 3 பாகை செல்ஸியஸ் ஆகவும் இரவில் 2 பாகை செல்ஸியஸ் ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் வெப்பநிலை 26.5 பாகை செல்ஸியஸ்ஸுக்கும் 28 பாகை செல்ஸியஸ்ஸுக்கும் இடையில் வேறுபடுவது வழமை. அதிக வெப்பம் உணரப்படுவதற்கு எல்நினோ வெப்பம் காரணமாக இருக்கலாம். பெப்ரவரியிலும் மார்ச்சிலும் இலங்கைக்கு நேர் மேலே சூரியன் வரும்.

பூகோள வளிமண்டல சுழற்சி காரணமாக நாட்டில் வீசும் காற்று உலர்ந்ததாக இருக்கின்றது. அடுத்த வாரமளவில் பருவ இடை மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அது தொடங்கினால் வெப்பம் குறையும். ஆனால், முழுமையாக குறையாது என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .