Editorial / 2020 மே 04 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே சென்றுவர முடியுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
இந்த மாவட்டங்களில் இன்று (04) முதல் மே மாதம் 6 ஆம் திகதி புதன்கிழமை வரை தினமும் இரவு 8 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், மே மாதம் 6 ஆம் திகதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எனினும், கொழும்பு , கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே மாதம் 11 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம், ஊரடங்கு சட்டம் இருக்கும் நிலையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரவும் நிறுவனங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago