Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியாலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, கடந்த 9 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நால்வர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவிசாவளை மேல்நீதிமன்ற நீபதிபதி அமல் திலகரத்னவே, அவர்களைப் பிணையில் விடுவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு அவர் கட்டளையிட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் சமுகமளித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கூட்டுப்படுகொலை மற்றும் கூட்டுக்கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் முன்னிலையில் ஆஜராகியிருக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய நால்வரின் பிணை மனுக்கள் தொடர்பில் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதியும், நவம்பர் 8ஆம் திகதியன்றும் ஆராய்வதற்கு திகதி குறிக்கப்பட்டன.
36 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
7 hours ago