2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: இழப்பீடு வழங்குமாறு உத்தரவு

J.A. George   / 2025 ஜூலை 24 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எக்ஸ்பிரஸ் பேர்ல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்துக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு குறித்த கப்பல் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டு தொகை கருவூலச் செயலாளரிடம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அப்போதைய அமைச்சர் நாலக்க கொடஹேவா, இந்த சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயரை் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X