2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எதைக் களவாடினரென தெரியாது?: ரூ.1,000 பில்லியன்களையே கண்டுபிடித்துள்ளோம்

Kogilavani   / 2016 மார்ச் 11 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதர்ஷினி சாமிவேல்

'மறுக்கப்பட்டிருந்த மக்களது உரிமைகளை 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் மக்களுக்கே பெற்றுக்கொடுத்தார். இதற்கு முன்பிருந்த அரசாங்கம், மக்களின் உரிமைகளைக் களவாடியது. உண்மையில், எதைக் களவாடினார்கள் என எமக்கு இதுவரை தெரியாது. அது தொடர்பில் நிதியமைச்சர் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றார். இதுவரை 1,000 பில்லியன் ரூபாய்களைக் வரை கண்டுபிடித்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஐந்தாண்டு செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு  கூறினார்.

அங்கு  தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 'முன்னொருபோதும் இல்லாத அபிவிருத்திகளை, தற்போது காண முடிகின்றது.

இவை 1994ஆம் ஆண்டில் நாம் எதிர்பார்த்த அபிவிருத்தி திட்டங்களாகும். 20 வருடங்களுக்கு பின்னர் தற்போதே, அவற்றை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், அமைச்சர் திகாம்பரம் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றார். மலையக மக்களின் சமூக அபிவிருத்தியில் 5ஆண்டு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம், மலையக தமிழ் மக்களுக்கு, காணியுரிமை பெற்றுக்கொடுப்பதற்கும் வீடமைத்துக்கொடுக்கவும், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்படுத்தவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டமாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .