2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம்

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலை சூத்திரத்துக்கு அமைய, இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், எரிபொருள் விலையானது இரண்டு தடவைகள் திருத்தம் செய்யப்பட்டன.

கடந்த மாதம் 10ஆம் திகதி செய்யப்பட்ட எரிபொருள் திருத்தத்துக்கமைய ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 4 ரூபாயாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .