Freelancer / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதைக் காணக்கூடியதாக இருந்தது.
எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணமுடிந்தது.
ஆயினும், தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய பெப்ரவரி மாதம் முடிவதற்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. R
13 minute ago
27 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
44 minute ago