2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

எல்லையில் பஸ் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது; ஜீப் சாரதி கைது

Editorial   / 2025 செப்டெம்பர் 05 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லையில் பஸ்ஸூடன் ஜீப்பும் 1000 அடி பள்ளத்தில் புரண்டுள்ளது , எல்ல காவல் பிரிவு, எல்ல வெல்லவாய சாலையின் 23வது மற்றும் 24வது கி.மீ தூண்களுக்கு இடையிலான பகுதியில், வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து, எதிரே வந்த ஜீப் ம சாலையின் பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி 1000 அடி பள்ளத்தில் 04.09.2025 அன்று இரவு 9 மணியளவில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநருடன் 30 பயணிகள் இருந்தனர், பேருந்தின் ஓட்டுநர் உட்பட 06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் விபத்தில் உயிரிழந்தனர். காயமடைந்த ஆண்கள், 06 பெண்கள், 05 சிறுவர்கள் மற்றும் 02 சிறுமிகள் சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பேருந்து பயணிகளை மீட்க உதவிய இரண்டு பேரும் காயமடைந்த பின்னர் சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தங்காலை பகுதியில் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. உடல்கள் தியத்தலாவை, பதுளை மற்றும் பண்டாரவளை மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துடன் தொடர்புடைய ஜீப்பின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .