2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எஸ்.எப். லொக்கா கைது

George   / 2015 நவம்பர் 01 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

அநுராதபுரம் இரவு விடுதி உரிமையாளரும் கராத்தே சம்பியனுமாகிய வசந்த சொய்சாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான, எஸ்.எப்.லொக்கா என்று அழைக்கப்படும் இரோன் ரணசிங்க, ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் நகருக்கு அண்மித்த பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இரவு 7.30 மணியளவில், அநுராதபுரம் 
பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான ருவன் குணசேகர தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இவர் கைதுசெய்யப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்ட இரோன் ரணசிங்க, 26 வயதுடையவர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட இரோன் ரணசிங்கவும் மற்றுமொருவரும் இணைந்து, வசந்த சொய்சாவை கொலை செய்யத் திட்டம் தீட்டியிருந்தாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அவரின் சகோதரரான ஹசித்த ரணசிங்க, 31ஆம் திகதி தங்கால்லை நகரத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X