2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஏட்டிக்கு போட்டியாக இன்று பேரணிகள்

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும், தங்களுடைய பலத்தை காண்பிப்பதற்காக, நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக்கட்சியும், ஏட்டிக்குப் போட்டியாக, பேரணிகளை இன்று நடத்தவுள்ளன.  

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நுகேகொடையில் நடைபெறும்.  

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பேரணி, அநுராதபுரத்தில் இன்று இடம்பெறவுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணிக்குப் பதில் பேரணியாகவே இப்பேரணி அமையும் என்று ஐ.தே.க அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .