Editorial / 2026 மார்ச் 30 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக அனைத்து துறைகளுக்கும் ஒட்டுமொத்தமாக 13.56% கட்டண உயர்வை அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபை (CEB) முன்னதாக முன்மொழிந்திருந்தது. எனினும், அந்த முன்மொழிவை மீாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்தத் திருத்தத்தை உறுதி செய்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்டணத் திருத்தம் தொடர்பான மீளாய்வு செயல்முறைகள் பூர்த்தியாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், வெவ்வேறு நுகர்வோர் பிரிவினருக்கு (வீட்டு உபயோகம், வர்த்தகம், கைத்தொழில்) இந்தக் கட்டண அதிகரிப்பு எந்த அளவில் அமையும் என்பது குறித்த விரிவான விபரங்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.
எரிசக்தி செலவு அதிகரிப்பு மற்றும் மின்சாரத் துறையின் நிதி நிலைத்தன்மையை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நாடு முழுவதும் உள்ள மின்சார நுகர்வோரை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9 minute ago
30 minute ago
35 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
30 minute ago
35 minute ago
43 minute ago