2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஐ.ஜி.பியின் பேஸ்புக்குக்குள் ஊடுருவியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கொன்றைத் திறந்து, அதனூடாகப் பெண்ணொருவரை ஏமாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், நாளை வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபரான ரஜின மதுசங்க வீரசேகர என்பவரே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் உத்தரவின் பேரில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலியான பேஸ்புக் கணக்கைத் திறந்து, தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரினால், ஜூலை மாதம் 10 ஆம் திகதி முறைப்பாடொன்று செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துரிதப்படுத்தினர்.

இந்நிலையில், நியூஸிலாந்திலிருந்து விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது, ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர், பிறிதொரு நபரின் பெயரில் பேஸ்புக் கணக்கைத் திறந்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று, பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X