2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க தலைமைக்கான தடை மனு நிராகரிப்பு

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி. பாருக் தாஜூதீன்

ஊவா மாகாண சபையில் உள்ள அங்கத்தவர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக்கு தடை விதிக்கும்படி, மஹியங்கனை தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் விடுத்த வேண்டுகோளை, கொழும்பு மாவட்ட நீதவான் ரி.டி.குணசேகர நிராகரித்தார்.

பதுளை மாவட்டத்தில் கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் தான் 9ஆவது இடத்தைப் பெற்றதாக மனுதாரரான பேராசிரியர் கே.பி.எ. பிரதீப் விஜேவர்தன கூறினார்.

ஊவா மாகாண சபையில் பல்வேறு பதவிகளுக்கு முதலாம் இடம் தொடக்கம் 8ஆம் இடம்வரை பெற்றவர்களை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்தது.

விரும்பு வாக்கு ஒழுங்கில் 9ஆவது இடம்பெற்ற தன்னைத் தவிர்த்துவிட்டு 10ஆம், 11ஆம் இடத்துக்கு வந்தவர்களுக்கு மாகாண சபையில் இடம் வழங்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகம் திட்டமிட்டு வருவதாக அவர் மனுவில் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதன் செயலாளர் கபீர் ஹாசிம், தேர்தல் ஆணையாளர் ஆகியோர் ஊவா மாகாண சபை உறுப்பினர்களை நியமிப்பதை நிறுத்தக் கோரி, மனுதாரர் நீதிமன்றிடம் கேட்டிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் கீழ் மனுதாரர், பரிகாரம் கோர முடியாது என பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் விவாதித்தார்.

மாகாண சபை சட்டத்தின் கீழ் மாகாண சபையில் ஏற்படும் வெற்றிடத்துக்கு கட்சித் தலைவர் எவரையும் நியமிக்கலாம் என்பது மாகாண சபைத் தேர்தல் சட்டமாகும் என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X