Editorial / 2025 ஏப்ரல் 07 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதுருகிரிய, பொரலுகொட வீதியில் உள்ள பொரலுகொட பிரிவைச் சேர்ந்த, வேட்பாளரின் வீட்டிற்கு, பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள், துப்பாக்கியைக் காட்டி பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு வந்த கொள்ளையர்கள் ரூ.180,000 பணம் இருந்த பணப்பையை திருடிச் சென்றுள்ளனர். மற்றுமு் ரூ. 85,000.மதிப்புள்ள இரண்டு மொபைல் போன்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
ஒப்பந்ததாரராக பணிபுரியும் புகார்தாரர், தனது வீட்டிற்குள் இருந்தபோது, வீட்டின் முன் உள்ள கேட்டை யாரோ தட்டுவதைக் கேட்டு, கேட்டை திறந்துள்ளார். அப்போது, பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அவ்விருவரும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி, இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026