Editorial / 2026 ஜனவரி 06 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து வந்த 15 வயது சிறுவன் ஒருவனைப் காவல்துறை கைது செய்துள்ளது.
ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், கடந்த ஓராண்டாக இந்திய ராணுவத்தின் முக்கிய இடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தரவுகளைச் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் கண்டறியப்பட்டன. சிறுவனின் தந்தை கொல்லப்பட்டதாக எழுந்த சந்தேகத்தால் அவன் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் உளவாளிகள் அவனைத் தங்கள் வலையில் வீழ்த்தியதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இந்தியப் பாதுகாப்பு முகமைகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐஎஸ்ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகள் தற்போது சிறுவர்களைக் குறிவைத்து உளவு வேலைகளில் ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டுள்ளதால், பஞ்சாப் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறுவனைப் போலவே மேலும் பல குழந்தைகள் இத்தகைய தேச விரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற செயல்களைத் தடுக்க, மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
17 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 Jan 2026
21 Jan 2026