2024 மே 23, வியாழக்கிழமை

ஐவருக்கு ’ அறிவுறுத்தல் சட்டத்தரணி’ அந்தஸ்து

Freelancer   / 2024 மே 03 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி' அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதில மற்றும் எஸ்.என்.எம். குணவர்தன உள்ளிட்டோருக்கே இந்த  அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

சட்டத் தொழிலில் சிறந்து விளங்குகின்றமை மற்றும் உயர்வான பண்புகளை வௌிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல் சட்டத்தரணிகள் ஆற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், 2023 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் மேற்படி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .