Editorial / 2026 மார்ச் 29 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

25 வயதுடைய ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் சனிக்கிழமை அன்று கொடூரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி (Barabanki) மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
பப்லு (வயது 25). இவர் வழக்கம் போல ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்காகப் பரசாவல் (Parsawal) கிராமத்திற்குச் சென்றுள்ளார். சங்கர் யாதவ் (வயது 50). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்.
பப்லு ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தபோது, அவருக்கும் சங்கர் யாதவிற்கும் இடையே திடீரென வாய்மொழித் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சங்கர் யாதவ், அரிவாளால் பப்லுவின் கழுத்தை அறுத்து, மக்கள் முன்னிலையிலேயே தலையைத் துண்டித்துள்ளார்.
கொலை செய்த பின் தப்பியோடாத சங்கர் யாதவ், துண்டிக்கப்பட்ட தலையைத் தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு எவ்வித சலனமும் இன்றி அவர் சமையல் செய்யத் தொடங்கியுள்ளார். தகவலறிந்து வந்த பொலிஸ் கண்காணிப்பாளர் அர்பித் விஜயவர்கியா தலைமையிலான படையினர், சங்கர் யாதவின் வீட்டைச் சுற்றி வளைத்தனர். பொலிஸார் உள்ளே நுழைந்தபோது, பப்லுவின் தலை அருகில் கிடக்க, சங்கர் யாதவ் சமைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
முன்னர் குறிப்பிட்டது போல, 25 வயதுடைய ஐஸ்கிரீம் வியாபாரி பப்லுவை கொடூரமான முறையில் தலை துண்டித்துக் கொலை செய்த 50 வயதுடைய சங்கர் யாதவை பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான அரிவாளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொலையாளியின் வீட்டிலிருந்து துண்டிக்கப்பட்ட தலையை மீட்ட பொலிஸார், அதனை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பலியான பப்லு தனது குடும்பத்தின் மூத்த மகன் ஆவார். மூன்று சகோதரர்களைக் கொண்ட அந்த ஏழ்மையான குடும்பத்திற்கு, கூலி வேலை செய்தும் ஐஸ்கிரீம் விற்றும் பப்லுவே முதுகெலும்பாகத் திகழ்ந்தார்.
"எனது கணவர் எங்களை விட்டுப் போய்விட்டார், இனி நாங்கள் என்ன செய்வோம்?" என பப்லுவின் மனைவியும், அவரது இரண்டு பிஞ்சுப் பிள்ளைகளும் கதறி அழுவது காண்போரைக் கலங்கச் செய்துள்ளது.
23 minute ago
1 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
29 Mar 2026