Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மே 20 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது நீல கிளவல்லா (தூணா இனத்தைச் சேர்ந்த மீன் திங்கட்கிழமை (20) பிடிபட்டுள்ளது.
காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையிலேயே சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும் 49 கிலோ கிராம் நிறையுடைய உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) என அழைக்கப்படும் நீல தூணா சிக்கியுள்ளது.
பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களை கொண்டுள்ள குறித்த மீன் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் மீனவரின் வலையில் பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் தூணா மீனின் விலை 24 இலட்சம் ரூபாயாகுமென கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை மீனில், ஒருதுண்டு சாப்பிட்டால், பத்து வருடங்கள் மேலதிகமாக வாழக்கூடிய சத்து கிடைக்குமென நம்பப்படுகின்றது.
பிடிபட்ட மீனை முறைப்படி இனங்கண்டு முறையாக பேணப்படாமையினால் ஒரு கிலோ கிராம் 3 லட்சம் ரூபாய்க்கு பேசப்படுகிறது.
கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் யாவும் பெறுமதி மிக்கதாக உள்ளதாகவும் பாரிய மீன்களை கொள்வனவு செய்கின்ற நிறுவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.
பாறுக் ஷிஹான்,வி.ரி.சகாதேவராஜா
32 minute ago
42 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
42 minute ago
45 minute ago