2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கோடி ரூபாய் வர்த்தகர் கைதானார்

Thipaan   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்

திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை வங்கியின் ஏல விற்பனையில் நகைகளை வாங்குவதற்காக வந்ததாகக் கூறப்படும் களுத்துறை அட்டுலுகமவைச் சேர்ந்த எம்.எச்.நஸ்ரின் (35 வயது), இன்று (07) காலை, பலாங்கொடை ஹல்துமுல்லையில்  வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, அட்டுலுகம பகுதியிலிருந்து திருகோணமலை இலங்கை வங்கிக்கு ஏல விற்பனையில் நகைகளை ஏலத்தில் வாங்கவந்து, ஏலம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இடைநடுவில், தண்ணீர் குடிப்பதற்காக வங்கிக்கு வெளியே சென்றவரை காணவில்லை என்று அவருடைய தந்தையான முகம்மட் லெப்பை முஹிதீன் பிர்தௌஸ் முறைப்பாடு செய்திருந்தார்.

அவர் ஏலத்துக்குச் செல்லும் போது, ஒரு கோடி ரூபாயைக் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், குறித்த வர்த்தகரை யாரும் கடத்தவில்லை எனவும், அவர் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கிருந்து வவுனியாவுக்கு வந்து, பின்னர் கொழும்புக்குச் சென்று அங்கிருந்து பதுளைக்குப் பயணித்துக் கொண்டிருந்த போதே, ஹல்துமுல்லையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வர்த்தகரை, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X