2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு விவகாரம்: பசிலுக்கு நோட்டீஸ்

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 7ஆம் திகதி வௌ்ளிக்கிழமையன்று, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, பூகொட நீதவான் நீதிமன்றத்தினால், நேற்றுச் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு விடுக்கப்பட்டது.  

பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் மல்வானை பிரதேசக் காணியின் உண்மையான உரிமையாளர் இல்லாவிடின், அக்காணியை விற்பனை செய்து, அந்தப் பணத்தை, இந்த வழக்கு விசாரணைக்காகப் பயன்படுத்துமாறு, அரசதரப்பு பொது வழக்குறைஞர் துசித் முதலிகே, பூகொட நீதவான் நீதிமன்றத்திடம், நேற்று(04) கோரினார்.   மல்வானை, ஆற்றோர வீதியில் அமைந்துள்ள சுமார் 16 ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்து, வீடொன்றை நிர்மாணிப்பதற்காக, அரசாங்க நிதியைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக, பூகோட நீதவான் நீதிமன்றத்தில், வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, அரசதரப்பு வழக்குறைஞரால், மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, பசில் ராஜபக்ஷ சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சஞ்ஜய ரணதுங்க, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், மேற்படி காணி தொடர்பிலான உத்தரவொன்று பிறப்பிக்கப்படுவதாயின், வழக்கின் எதிராளி, மன்றில் ஆஜராகியிருக்க வேண்டுமென்றார்.  

இதனையடுத்து, எதிர்வரும் 7ஆம் திகதிக்கு, இந்த வழக்கை ஒத்திவைத்த நீதவான் டீ.ஏ.ருவன் பத்திரண, அன்றைய தினம், பசில் ராஜபக்ஷவை மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .