2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காணாமல் போனாரின் குடும்பங்களுக்கு முன்னுரிமை

George   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கான உதவிகள் வழங்குவதை முதன்மை இலக்காகக் கொண்டு ஐ.சி.ஆர்.சி இயங்குவதாக ஐ.சி.ஆர்.சி நிறுவனத்தின் வடக்கு, கிழக்குக்கான கள உத்தியோகத்தர் றெனோல்ட் தெரிவித்தார்.

கிளிநொச்சி அக்கராயன் கமநல சேவை நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(30), 400 குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் விவசாய முயற்சிக்காக நெல், நிலக்கடலை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  

மீள்குடியேற்றத்தின் பின்னர் வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஐ.சி.ஆர்.சி இயங்கி வருகின்றது. 2014 தொடக்கம் காணாமல் போன குடும்பங்களுக்கு உதவி வருகின்றது. 2015இல் பகுப்பாய்வினை மேற்கொண்டு காணாமல் போன குடும்பங்களுக்கான உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றது.

2016 இலும் காணாமல் போன குடும்பங்களை ஆய்வுக்குட்படுத்தி உதவிகளை முன்னெடுத்து வருகின்றது. வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன குடும்பங்களுக்கு உதவுவதை பிரதான இலக்காகக் கொண்டு ஐ.சி.ஆர்.சி இயங்கி வருவதுடன், தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் நலன்களையும் பேணி வருகின்றது.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் இவ்வாறான உதவிகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்குகின்றது. வழங்கப்படுகின்ற உதவிகளை மக்கள் சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .