2025 மே 19, திங்கட்கிழமை

கீதாவை விசாரிக்க அனுமதியளிக்கவும்: சபாநாயகரிடம் கோரிக்கை

Gavitha   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இதன்போது விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீதா குமாரசிங்கவுக்கு இலங்கை மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், வேறு நாட்டு பிரஜைகளால் இலங்கை நாடாளுமன்றத்துக்கு தெரிவாக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X