2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த

Menaka Mookandi   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்று, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், குற்றங்களை ஒப்புக்கொண்டார்.  

அத்துடன், இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள மூன்று வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அவர் இன்று, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தார்.

அவர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, 'தனது கட்சிக்காரரான துமிந்த சில்வா, குற்றங்களை ஒப்புக்கொண்டு, இந்த வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளார்' என, நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .