2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குற்றவாளிகளுக்கு விசேட பாதுகாப்பு

Menaka Mookandi   / 2016 மார்ச் 04 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறான குற்றவாளிகளின் வழக்கு விசாரணைகளின் போது, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலிருப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதற்காக, விசேட அனுமதியொன்றை நீதி அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு, சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்தார்.

இந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில், மேற்கண்ட குற்றவாளிகள், அவர்கள் தொடர்பான வழக்குகளில் மாத்திரமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.

தெமட்டகொடை சமிந்த என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தை அடுத்தே, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .