Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 15 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் நடைபவனியொன்று காரணமாக, கொழும்பு - நகர மண்டபம் பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புதிய இலங்கைக்கு இடமளிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ், இந்த நடைபவனி இடம்பெற்று வருகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்த நடைபவனி, தாமரைத்தடாக மண்டபத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்தப்படும் கூட்டமொன்றுடன் நிறைவுபெறும்.
இதேவேளை, இலவசக் கல்வியை பாதுகாத்தல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலமொன்றும், கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
களனி பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம், தற்போது தெமட்டகொடை பகுதியைக் கடந்து பயணிக்கிறது. தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை, ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைப்பதற்காக, ஜனாதிபதி செயலகம் வரையில் இந்த ஊர்வலம் இடம்பெறும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago