2025 மே 19, திங்கட்கிழமை

கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு சுஷ்மாவிடம் கோரிக்கை

Thipaan   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு அ.தி.மு.க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்ததாகும், இது குறித்து பரிசீலனை செய்வதாக சுஷ்மா தெரிவித்ததாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை அ.தி.மு.க எம்.பி.க்கள் புதுடெல்லியில் சந்தித்து பேசினர். தம்பிதுரை தலைமையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி.க்கள், அமைச்சர் சுஷ்மாவை சந்தித்தனர். 

இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் சுஷ்மா உறுதியளித்ததாக தெரிவித்தார்.

மேலும், மீனவர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதியுடன், தான் பேசவுள்ளதாக சுஷ்மா தங்களிடம் தெரிவித்ததாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.

மேலும், இவ்விவகாரத்தில் இலங்கைத் தூதருடனும் பேசுவதாக சுஷ்மா உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுத்தோம். அக்கோரிக்கை குறித்துப் பரிசீலனை செய்வதாக சுஷ்மா தெரிவித்ததாகவும் தம்பிதுரை கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X