2025 மே 19, திங்கட்கிழமை

கடந்த 10 மாதங்களில் 22,245 பேருக்கு டெங்கு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் இவ்வாண்டு முதல் பத்து மாதங்களில்  22,245 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

அவற்றுள் அதிகமான டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து 51.06மூ சதவீதமானோர்கள் டெங்கு காய்ச்சலினால் பீடித்துள்ளமைக்காக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதை கண்ணுற்ற தொற்றுநோய்ப் பிரிவினர் டெங்கு நுளம்புத் தொற்றினை குறைக்கும் வகையில் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தொடர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாது காய்ச்சல் தொடரும் சமயத்தில் அருகிலுள்ள வைத்தியர்களை அணுகுவது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X