2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’கடலைலைகள் கரையேறக்கூடும்’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்னம்

புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக, பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்று, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கரையோரப் பிரதேசங்களிலுள்ள கடலலைகள், 2 முதல் 2.5 வரையில் உயருமெனத் தெரிவித்துள்ள திணைக்களம், அதனால் அலைகள் கரையை நோக்கிப் பிரவேசிக்குமெனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பிரதேசங்களின் கடலலைகளின் வேகம் அதிகமாகக் காணப்படும் என்றும் அதனால், குறித்த பிரதேசங்களிலுள்ள மீனவர்கள், கடற்படையினர், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை வடக்கு - கெலிடோ கடற்கரைப் பகுதியில், நேற்று (07) பிற்பகல் 2 மணியளவில், சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்கு, திடீரென கடல் நீர் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதனால், களுத்துறை நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உட்பட 30 வீடுகள், உல்லாச விடுதிகள், கெலிடோ கடற்கரை வீதி மற்றும் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களும் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.  

இதற்கு முன்னரும், கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதியன்று அதிகாலை 5 மணியளவில், இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றதுடன், இதன்போது 22 வீடுகள் நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .