2024 மே 23, வியாழக்கிழமை

கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்

Freelancer   / 2024 மே 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி முதல் கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால், மேற்படி கடற்பிரதேசங்களில் கடலலைகள் 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடலலைகள் கரைக்கு வரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை  ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாற்பட்ட கடற்பிராந்தியங்களில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், அப்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .