2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கட்டுநாயக்கவில் இரண்டு ஜோடிகள் கைது

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜீ.கபில

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளை, சட்டவிரோதமானமுறையில் இலங்கைக்கு கொண்டுவந்த நால்வர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று (24) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே,  இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, சுங்கப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் தெரிவித்தார்.

சிலாபம், வென்னப்புவ பகுதிகளைச் சேர்ந்த திருமணமான ​ஜோடிக​ளே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுடன்,  2 வயது சிறுமியும் இருந்ததாக, சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

டுபாயிலிருந்து வருகைதந்த விமானத்தில்,  கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்த இவர்களின் பயணப் பொதியிலிருந்து, 53,13,000 ரூபாய் பெறுமதியான 483 சிகரெட்  பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .