Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Janu / 2025 மார்ச் 13 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது நண்பனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியை குற்றவாளி எனக் கண்டறிந்துபொலன்னறுவை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பொலன்னறுவை, கவுடுல்ல பகுதியைச் சேர்ந்த காமினி ரணவீர என்ற நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த, பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் 1 திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் , பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் கவுடுல்ல பிரதேசத்தில், பி.ஜி. ரன்பண்டா என்பவரை மண்வெட்டியால் தாக்கி கொன்ற குற்றச்சாட்டில், இலங்கை தண்டனை கோவைச் சட்டத்தின் பிரிவு 296 இன் கீழ், பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
பிரதிவாதியான காமினி ரணவீர, இறந்தவரின் மனைவியுடன் ஈடுபட்டிருந்த தகாத உறவின் விளைவாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago