Nirosh / 2021 மார்ச் 14 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியும், சட்டவிரோத போதைப்பொருள்களைப் பயன்படுத்தியும் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி - அனிவத்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த களியாட்டத்தில், கண்டியைச் சேர்ந்த வர்த்தகர்களின் பிள்ளைகளே கைது செய்யப்பட்டுள்ளதோடு, 21 வயதுக்குக் குறைவான இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருந்ததாகவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த நபரே இந்த பேஸ்புக் களியாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதில் கிரிபத்கொட, மீரிகம, ஜா-எல, கடவத்த ஆகியப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டிருந்ததாகவும் அத்திணைக்களத்தின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த களியாட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக 2 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. களியாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நபர் உள்ளிட்ட 11 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago